2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு

Thipaan   / 2014 நவம்பர் 29 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கோடு ஆரம்ப கணினிப் பயிற்சி மற்றும் தையல் பயிற்சியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு, புதுக்குடியிருப்பில் நேற்று வெள்ளிக்கிழமை (28) இடம்பெற்றது. 

புதுக்குடியிருப்பு விவேகானந்தா தொழில் நுட்பக் கல்லூரியில் பயிற்சிகளை முடித்தவர்களுக்கு, மூன்றாம் நிலை தொழில் கல்வி ஆணைக்குழுவின் தொழில் தகைமை சான்றிதழ் இதன்போது வழங்கப்பட்டன.

சமூக நலன்புரி அமைப்பினால் நடாத்தப்பட்ட இப்பயிற்சி நெறியை பூர்த்தி செய்த 60 பேருக்கான  சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு அதன் தலைவர் எஸ். திருநாவுக்கரசு தலமையில் நடைபெற்றது.

இதன்போது தூர இடங்களிலிருந்து வரும் பயிற்சியாளர்களின் போக்குவரத்து வசதிக்காக  துவிச்சக்கர வண்டிகளும்  வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், கிழக்கு பல்கலைக் கழக பிள்ளை நலத்துறைப் பேரசிரியர் எம்.செல்வராஜா, சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளர் க.துரைநாயகம் ஆகியோர் கலந்து கொண்டு சான்றிதழ்களையும்; துவிச்சக்கர வண்டிகளையும் வழங்கி வைத்தனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X