2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

செழிப்பான இல்லம் திட்டத்தின் கீழ் பணக்கொடுப்பனவு

Gavitha   / 2014 நவம்பர் 30 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வாழ்வின் எழுச்சி நிவாரணம் பெறுபவர்களுக்கு, செழிப்பான இல்லம் திட்டத்தின் கீழ்  வீடுகளைத் திருத்துவதற்கான பணக்கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (29) இருதயபுரம் திரு இருதயநாதர் மண்டபத்தில் நடைபெற்றது.

இருதயபுரம் மற்றும் இருதயபுரம் கிழக்கு சமூர்த்தி வங்கிச் சங்கங்களிலுமிருந்து தெரிவு செய்யப்பட்ட 4,300 பயனாளிகளுக்கு முதற்கட்டமாக தலா ரூபாய் 2,500 வீதம் வழங்கப்பட்டன.

கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன், திவிநெகும திணைக்களத்தின் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் வி. குணரெத்தினம், திவிநெகும திணைக்களத்தின் மட்டக்களப்பு வலய இணைப்பாளர் ஜே.எப்.மனோகிதராஜ், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பி.பிரசாந்தன் மற்றும் திவிநெகும திணைக்கள முகாமையாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு கொடுப்பனவுகளை வழங்கி வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X