2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு மாகாணசபை அமர்விலிருந்து அ.இ.ம.கா. உறுப்பினர்கள் மூவர் வெளிநடப்பு

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 02 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த  மாகாணசபை உறுப்பினர்கள் மூவர் கிழக்கு மாகாணசபையில்  தனித்து இயங்கப்போவதாக அறிவித்துவிட்டு, மாகாணசபை அமர்விலிருந்து வெளிநடப்புச் செய்ததாக கிழக்கு மாகாணசபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர், பொறியியலாளர்; சிப்லி பாறூக் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபை அமர்வு  திங்கட்கிழமை (01) நடைபெற்றது. இதன்போது,  பிற்பகல்  அமர்வில்  கலந்துகொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாகாணசபை உறுப்பினர்களான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி,  சிப்லி பாறூக், மாகாணசபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர் ஆகியோரே சபையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, தமது கட்சியின்  மாகாணசபை உறுப்பினர்கள் மூவர் கிழக்கு மாகாணசபையில் தனித்து இயங்கப்பேவதாக அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து,  தாங்கள் மூவரும் வெளிநடப்புச் செய்ததாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X