2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மைத்திரிபாலவுக்கு எதிராக ஆர்ப்பாட்ட பேரணி

Gavitha   / 2014 டிசெம்பர் 02 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக, மட்டக்களப்பு பிரதேசவாசிகளால் திங்கட்கிழமை (01) ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கே எங்கள் வாக்குகள், மைத்திரி கட்சியை காட்டிக்கொடுத்து விட்டார், தமிழ் மக்களின் ஆதரவு மஹிந்தவுக்கே என்று வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஆர்ப்பாட்டகாரர்கள் ஏந்தியவண்ணம் பேரணியை முன்னெடுத்து சென்றனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் செங்கலடி காரியாலயத்துக்கு முன்னால் ஆரம்பமான இவ்வார்ப்பட்டத்தில், கல்குடா தொகுதி ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பிரதம அமைப்பாளர் டி.எம்.சந்திரபால கலந்து கொண்டிருந்தார்.
இவ்வார்ப்பட்ட பேரணி சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X