2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி ஊர்வலம்

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 03 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ்.பாக்கியநாதன்

டிசெம்பர் 03ஆம் திகதி மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, மட்டக்களப்பு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் ஊர்வலம் புதன்கிழமை (03) காலை நடைபெற்றது.

கிழக்கு மாகாண சமூகசேவைகள் திணைக்களம், மட்டக்களப்பிலுள்ள அரசசார்பற்ற நிறுவனங்கள், மட்டக்களப்பு மாவட்ட வலது குறைந்தோர் அமைப்புக்கள் உள்ளிட்டவை இணைந்து இந்த ஊர்வலத்தை நடத்தின.

மட்டக்களப்பு காந்தி சதுக்கத்திலிருந்து ஆரம்பமான இந்த ஊர்வலம், மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபம்வரை சென்றது.

இந்த ஊர்வலத்தில் சமூகசேவைகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு உத்தியோகஸ்தர் உட்பட அதன் அதிகாரிகள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், விசேட தேவையுடை பாடசாலைகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X