2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

போதைப்பொருள் பாவனையற்ற கிராமங்களை உருவாக்கும் திட்டம்

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 04 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை அற்ற கிராமங்களை உருவாக்கும் திட்டத்தை மாவட்ட  மதுவரித் திணைக்களம் மேற்கொண்டுள்ள நிலையில், இது தொடர்பில்  அறிவுறுத்தும் கூட்டம் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில்  புதன்கிழமை (03) நடைபெற்றது.

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் கடமையாற்றும் கிராம சேவையாளர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளை அறிவுறுத்தும் வகையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இதன்போது, போதைப்பொருள்  பாவனையை  கட்டுப்படுத்துதல் மற்றும் போதைப்பொருள்  பாவனையால் சமூகத்தில் ஏற்படும் தாக்கங்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விளக்கமளிக்கப்பட்டன. 

மட்டக்களப்பு மாவட்ட மதுவரித் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தலைமையில் இந்தக் கூட்டம்  நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X