2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சுகாதார விழிப்புணர்வுக் கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 04 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில், கோளாவில் அம்மன் மகளிர் இல்லத்திலுள்ள பிள்ளைகளுக்கு சுகாதாரப் பழக்கவழக்கங்கள் மற்றும் பற்சுகாதாரம்  தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு புதன்கிழமை (03) நடத்தப்பட்டது.

சுகாதார வாரத்தை முன்னிட்டு கோளாவில் அம்மன் மகளிர் இல்லத்தில் நடத்தப்பட்ட இந்தக்  கருத்தரங்கில் பற்சுகாதாரம், சுகாதாரப் பழக்கவழக்கங்கள், தொற்று நோய்களை எவ்வாறு தவிர்ப்பது போன்ற பல விடயங்கள் தொடர்பில்  விளக்கமளிக்கப்பட்டன.

இதில் மேற்பார்வை சுகாதார பரிசோதகர் எஸ்.மகேஸ்வரன், ஆலையடிவேம்பு சுகாதார பரிசோதகர் வி.கேதிஸ்வரன், ஆலையடிவேம்பு பொதுச்சுகாதார பரிசோதகர் கே.மனோகரன், எஸ்.ரி.ஏ.பவுண்டேசன் நிறுவன திட்ட இணைப்பாளர்  வே.வாமதேவன் மற்றும் அம்மன் மகளிர் இல்லப் பணியாளர்களும் பிள்ளைகளும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X