2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

உணவு விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு சான்றிதழ்கள்

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 05 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உணவக விற்பனை நிலையங்களின்   உரிமையாளர்களுக்கு சான்றிதழ்கள்  நகர மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (05) வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில் ஒருவாரம் நடத்தப்பட்ட பயிற்சிப்பட்டறையில் கலந்துகொண்ட 48 இந்தச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்தப் பயிற்சிப்பட்டறையில், சுகாதாரத்துடன் உணவு தயாரித்தல் மற்றும் பாதுகாத்தல் விளக்கமளிக்கப்பட்டன.

நகரில் வசிப்போருக்கு வேலைப்பழு அதிகமாகவுள்ளதால் 90 சதவீதமானோர்  உணவுக்கு கடைகளை நாடுவதை  காணமுடிகின்றது. எனவே, உணவுகளை விற்பனை செய்யும் நீங்கள், மிகவும் சுத்தமாகவும் பொறுப்புடனும் நடக்கவேண்டும் என்று மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

மேலும், சுகாதாரமற்ற முறையில் உணவுகளை தயாரித்தல் மற்றும் விற்பனை செய்வோருக்கு  சட்ட எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X