2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வடக்கு, கிழக்கிலுள்ளவர்கள் வாக்குப்பதிவை செய்வதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொள்ளுமாறு மாவை கோரிக்கை

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 19 , மு.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா,ஜ.நேகா,கே.எல்.ரி.யுதாஜித்

வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் இம்முறை முழுமையான வாக்குப்பதிவை மேற்கொள்வதற்குரிய வேலைத்திட்டங்களை மேற்கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களிடம் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லடி, உப்போடையில் நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான கலந்துரையாடல் வியாழக்கிழமை (18) நடைபெற்றது. இதன்போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

இங்கு அவர் தெரிவிக்கையில்,

'தமிழ் மக்களுக்கு பொருத்தமான வேளையில் கூட்டமைப்பின் முடிவை அறிவிப்போம். வாக்களிப்பில் தவறாது சகல தமிழ் மக்களும் கலந்துகொள்ள வேண்டும். kuuddamaippin தலைவர் iraa.சம்பந்தன் நாடு திரும்பியதும் எமது இறுதி முடிவு மக்களுக்கு வெளியிடப்படும். ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் எடுக்கும் தீர்மானமே இறுதித்தீர்ப்பாக அமையும்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், அனைவரும் வந்திருந்து ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக மாகாணசபை உறுப்பினர்கள் மத்தியிலும் பிரதேச சபை உறுப்பினர்கள் மத்தியிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மத்தியஸ்தக்குழுவிலும் எவ்வாறு கருத்துக்களை அறிந்துகொண்டோமோ, அதேபோல் திருகோணமலையிலும் அம்பாறையிலும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருக்கின்ற பிரதிநிதிகளிடத்திலுமிருந்து கருத்துக்களை அறிந்துகொண்டோம். இக்கருத்துகள் மிகவும் ஆரோக்கியமான முறையில் பரிமாறப்பட்டிருக்கின்றன.

மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு தமது கருத்துகளை வெளியிட்டிருக்கின்றார்கள். இவையெல்லாவற்றையும் ஒன்றுதிரட்டி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமையுடன் நாங்கள் தொடர்ச்சியாக விவாதித்துக்கொண்டிருக்கின்றோம்.

இறுதியான முடிவு மிகவிரைவில் எடுக்கப்படும். மிக விரைவில் எங்களுடைய நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிப்பதற்கு நாங்கள் எண்ணிக்கொண்டிருக்கின்றோம். வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ்,, முஸ்லிம் மக்கள் இம்முறை முழுமையான வாக்குப்பதிவை மேற்கொள்வதற்கு உரிய வேலைகளை செய்யும்படி நாங்கள் வேண்டுகோள் விடுத்திருக்கின்றோம்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளின் படி கிடைத்த இந்த ஜனநாயக சந்தர்ப்பத்தில் தங்கள் வாக்குப்பதிவுகளை முழுமையாக செய்வதாக அவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். எங்கள் மக்களுடைய வெற்றி மிக முக்கியமானது.

எத்தனையோ துன்ப, துயரங்களுக்கு பிறகும் இதுவரையில் எந்த நன்மைகளையும் பெறாத எங்கள் மக்களுடைய உடனடிப் பிரச்சினைகளுக்காவது ஒரு தீர்வு வரவேண்டும் என்பதை கருத்தில்கொண்டு நாங்கள் கலந்துரையாடி வருகின்றோம்.

ஆகவே நாங்கள் வெகு விரையில் உங்கள் எதிர்பார்ப்புகளையெல்லாம் நிறைவுசெய்யக்கூடியதாக யாருக்கு நாங்கள் வாக்களிக்க வேண்டும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை உறுதிபட தெரிவிப்போம்' எனக் கூறினார். 




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X