2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஏறாவூர் நகரசபை வரவு –செலவுத்திட்டம் நிறைவேற்றம்

Suganthini Ratnam   / 2014 டிசெம்பர் 19 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஏறாவூர் நகரசபையின் 2015ஆம் ஆண்டுக்கான  வரவு –செலவுத்திட்டம் அனைத்து கட்சிகளினதும் ஏகோபித்த ஆதரவுடன்  நிறைவேற்றப்பட்டுள்ளதாக  அந்நகரசபைத் தவிசாளர் செய்யித் அலிஸாஹீர் மௌலான தெரிவித்தார்.

ஏறாவூர் நகரசபைத் தவிசாளர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானாவின் தலைமையில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற மாதாந்த அமர்வில், வரவு செலவுத்திட்டத்துக்கு  அனைத்து உறுப்பினர்களும் தமது கைகளை உயர்த்தி ஆதரவு தெரிவித்தனர்.

வரவு -செலவுத்திட்டத்தை முன்மொழிந்து ஏறாவூர் நகரசபைத் தவிசாளர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா உரையாற்றினார். இதையடுத்து, உறுப்பினர் ஐ.ஏ.வாசித் பிரேரிக்க உறுப்பினர் பி.எம்.ஏ.அமீன் இஸ்ஸத் ஆஸாத் வழிமொழிந்தார்.

இதன் பிரகாரம் 2015ஆம் ஆண்டுக்கான வருமானம் 7 கோடியே 83 இலட்சத்து 71 ஆயிரத்து 500 ரூபாய் ஆகும். செலவினம் 7 கோடியே 83 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ஆகும். இதனடிப்படையில் 1,500 ரூபாய் மிகை வருமானமாக கொள்ளப்படுகிறது.

ஏறாவூர் நகரசபையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர் ஐவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள்; இருவரும் சுயேச்சைக்குழு உறுப்பினர் ஒருவரும் உள்ளனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X