2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சீரற்ற காலநிலை தொடர்கிறது

Gavitha   / 2014 டிசெம்பர் 27 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பட்டிருப்பு பாலம் தொடக்கம் போரதீவு வரையான வீதி, வெல்லாவெளி- மண்டூர் வீதி, வெல்லாவெளி - பாலையடிவட்டை வீதி, உட்பட பல வீதிகளின் போக்குவரத்துக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவின் கடுக்காமுனை வில்லுக்குளத்தின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளமையால், குளத்தை அண்டிய கிராமங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

பட்டிப்பளை, வெல்லாவெளி, களுவாஞ்;சிக்குடி, காத்தான்குடி, வாகரை, செங்கலடி, வவுணதீவு பிரதேச செயலக பிரிவுகள் வெகுவாகப்  பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ளப் பாதிப்பு நிலைமைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் இன்று (27) பார்வையிட்டார்.


 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X