2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை

Gavitha   / 2014 டிசெம்பர் 28 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


வெள்ளத்தினால் இடம் பெயர்ந்து மட். வந்தாறுமூலை விஷ்ணு வித்தியாலயத்தில் தங்கியுள்ள மக்களை, நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் சனிக்கிழமை (27) நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

குறித்த பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் பிரதேச செயலாளருக்கு உத்தரவிட்டார்.

மட்டக்களப்பில் அண்மைய நாட்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால், மாவட்டத்தில் 493,879 பேர் பாதிக்கப்;பட்டுள்ளதுடன் பல பகுதிகளுக்கிடையிலான போக்குவரத்தும் முற்றாகத் தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X