2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

தேர்தல் தொடர்பான கண்காணிப்பு குழு மட்டக்களப்பு விஜயம்

Gavitha   / 2014 டிசெம்பர் 29 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.எல்.ரி.யுதாஜித்


ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கண்காணிப்புகளுக்காக, சர்வதேச கண்காணிப்பாளர் குழவினர் திங்கட்கிழமை (29) மட்டக்களப்பு மாவட்டத்துக்கு உத்தியோபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

இக்குழவினர், மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான திருமதி .பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஏ.எம்.எம்.கபீர் ஆகியோரைச் சந்தித்து,  தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள், பதிவு செய்யப்பட்டுள்ள தேர்தல் வன்முறைகள், அது தொடர்பான செயற்பாடுகள் குறித்துக் கலந்துரையாடினர்.

அத்துடன், இக்குழுவினர் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு அலுவலகத்துக்கும் மாவட்ட தேர்தல்கள் திணைக்கள அலுவலகத்துகும் விஜயம் செய்துடன், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டனர்.

தேர்தல் தொடர்பான கண்காணிப்புகளுக்காக நியமிக்கப்பட்ட இக்குழவில், சர்வதேச கண்காணிப்பாளரான பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நயீம் அகமட், இலங்கையின் சர்வதேச கண்காணிப்பாளர் குழுவின் ஏ.எம்.ஆரீப், வி.பிரதீபன் ஆகியோர் அடங்கியிருந்தனர்.

மட்டக்களப்பில் இதுவரையில் தேர்தல் வன்முறைகள் தொடர்பான 17 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் அலுவலகம் தெரிவித்தது.


 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X