2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மாற்றுத்திறனாளிகள் தின விழா

Gavitha   / 2014 டிசெம்பர் 30 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


மாற்றுத்திறனாளிகள் தின விழாவும் 'தடைகளே படிகளாக' மலர் வெளியிடும் செவ்வாய்க்கிழமை (30) மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலக சமூக சேவைகள் பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாற்றுத் திறனாளிகளுக்கான பரிசுகளும் சிறந்த முதியோர் இல்லங்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டன.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி. தவராஜா தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தரிசனம், வாழ்வோசை, ஓசாணம், மென்கப், புகலிடம் மாற்றுத்திறனாளிகளின் கலை நிகழ்வுகளும்  இடம்பெற்றன.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சாள்ஸ், ஹண்டிகப் இன்டர்நெசனல் நிறுவனத்தின் உதவி நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் ரி. பகீரதன், மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகஸ்தர் எஸ். அருள்மொழி, மாற்றுத்திறனானாளியான ஆசிரியர் என். இருதயராஜன் ஆகியோர்கள் அதிதிகளாக கலந்துகொண்டனர்.



 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X