2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கிவைப்பு

Gavitha   / 2014 டிசெம்பர் 31 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (31) மட்டக்களப்பு மாமாங்கத்தில் நடைபெற்றது.

மாமாங்கம் சிக்கனக் கூட்டடுறவு சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், பாதிக்கப்பட்ட சுமார் 100 பேருக்கு முதல்கட்டமாக அரிசி, சீனி, பருப்பு என்பன வழங்கப்பட்டதாக, சங்கத்தின் ஸ்தாபக தலைவர் எஸ். சோமசுந்தரம் தெரிவித்தார்.

இச்சங்கமானது, சிறந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு மாதாந்த உதவிப் பணம், சங்கத்தில் அங்கத்துவம் பெற்றுள்ளவர்களின் மரண செலவுக்கு தலா ரூபாய் 6,000 முதல் வழங்குவதாகவும் மற்றும் அங்கத்தவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவிகள் புரிவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சிவில் சமூகத்தின் தலைவர் எஸ். மாமாங்கராஜா, சங்கத்தின் உப தலைவர் எம். உதயகுமார், பொருளாளர் கே. வீரலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X