2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஒன்பது பேருக்கு டெங்கு

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 02 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


அண்மையில் பெய்த அடை மழையைத் தொடர்ந்து,  மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட ஒன்பது பொதுச்சுகாதார பிரிவுகளிலுமிருந்து 20 பேர் டெங்கு தொற்றுக்குள்ளாகியுள்ளதாக  மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

புளியந்தீவு பொதுச்சுகாதார பிரிவில் அதிகூடியதாக 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் பற்றி  மாநகர ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (02) நகர பஸ் நிலையம் முன்பாக நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தின் பின்னர் மாநகரசபைக்குட்பட்ட பிரிவுகளில்  கான்கள் உள்ளிட்டவை பரிசோதிக்கப்பட்டதுடன், வீதிகளில் வளர்ந்துள்ள புற்கள், குப்பைகள் ஆகியவற்றை அகற்றி  துப்பரவு பணி செய்யப்பட்டது.

மட்டக்களப்பு சிவில் சமூகத்தின் தலைவர் எஸ்.மாமாங்கராஜா, மாமாங்கம்,  சிக்கன கூட்டுறவுச்சங்கத் தலைவர் எஸ்.சோமசுந்தரம், கிராம சேவகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்


 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X