2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'த.தே.கூ. வெளிநாடுகளிடம் பணத்தை பெற்றுக்கொண்டு எதிரணிக்கு வாக்களிக்க கூறுகிறது'

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 05 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வா.கிருஸ்ணா


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது வெளிநாடுகளிடம் பணத்தை பெற்றுக்கொண்டு, தமிழ் மக்களை எதிரணிக்கு வாக்களிக்குமாறு கூறுவதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட பலாச்சோலை பகுதியில் திங்கட்கிழமை (5) நடைபெற்ற  தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதினெட்டு இலட்சம் மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றார். நீங்கள் அனைவரும் எதிரணியில் போட்டியிட்ட சரத் பொன்சேகாவுக்கு  வாக்களித்தீர்கள். அதனால் என்ன பயனை அனுபவித்தீர்கள்?

உங்களை எதிரணிக்கு வாக்களிக்கமாறு கூறுவதற்கு  தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு  என்ன அருகதை இருக்கின்றது? அவர்கள் யுத்தத்தில் தங்கள் உறவுகளையோ அல்லது சொத்துக்களையோ இழந்தார்களா? நீங்களே உங்கள் குழந்தைகளையும் சொத்துக்களையும் இழந்தீர்கள். அவர்கள் கொழும்பிலிருந்துகொண்டு, கிடைக்கின்ற வசதி, வாய்ப்புகளை அனுபவித்துக்கொண்டு உங்களை எதிரணிக்கு வாக்களிக்குமாறு கூறுகின்றார்கள்.

எமக்கு பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவையோ அவரது கொள்கைகள் பற்றியோ எதுவும் தெரியாது. கிடைக்கப்போகும் பலாக்காயை விட, கிடைத்திருக்கும் களாக்காய் பெரிது என்றொரு பழமொழி இருக்கின்றது. எங்களுக்கு கிடைத்திருக்கின்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போதும். ஏனென்றால், இங்கு அபிவிருத்திகள் நடக்கின்றன. பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன' என்றார்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X