2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

முகத்துவாரக் கடலில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 07 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஜே.எப்.காமிலா  பேகம்,எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் நாசிவன்தீவு முகத்துவாரக் கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது, நீரில் மூழ்கி இளைஞர்கள் இருவர் உயிரிழந்ததாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தளையை   வசிப்பிடமாகக்கொண்ட  முஹம்மட்   றிபாஸ் (வயது 23),  வாழைச்சேனையை  சேர்ந்த   ஹயாத்து  முஹம்மது  ரிமாஸ்  (வயது 22) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்தனர்.

மேற்படி கடலில் செவ்வாய்க்கிழமை (06) 7 நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்தனர். இதன்போது மேற்படி இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் பொலிஸார் கூறினர்.  

இந்தச் சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X