2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

ஏறாவூரிலுள்ள வீடொன்றில் திருட்டு

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 06 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வீடொன்றில் நேற்று வியாழக்கு நள்ளிவு திருட்டுப் போயுள்ளதென்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

தானும் தனது சகோதரனும் வீட்டின் ஒருபக்க அறையில் உறங்கிக்கொண்டிருந்தபோது    ஜன்னல் வழியாக கதவை திறந்துகொண்டு மற்றைய அறையினுள் உட்புகுந்த திருடர்கள், உடுதுணிதுணிகள் வைக்கும் பெட்டகத்தை திறந்து அதிலிருந்த  இரண்டரைப் பவுண் நெக்லஸ், 3 பவுண் நிறையுள்ள 3 வளையல்கள் என்பவற்றை திருடர்கள் திருடியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  மோப்ப நாய்களுடன் சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X