Gavitha / 2015 பெப்ரவரி 08 , மு.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்
இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்டக்கிளை உறுப்பினர்கள், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைக்கு சனிக்கிழமை (07) நல்லெண்ண அனுபவப் பகிர்வு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது, இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைக் காரியாலயத்தில் பரஸ்பர அனுபவப் பகிர்வுகள் இடம்பெற்றது.
கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் செஞ்சிலுவைச் செயற்பாடுகளுக்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட சவால்கள், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.
மேலும் கிளிநொச்சி மாட்ட செஞ்சிலுவைத் தொண்டர்களுக்கு மட்டக்களப்பில் நீச்சல் பயிற்சி வழங்குதல், மேற்படி இரண்டு மாவட்டங்களிலுமுள்ள தொண்டர்களை வலுப்படுத்தல், தொண்டர் பயிற்சி முகாம்களை எதிர்காலத்தில் முன்னெடுக்கவும் இதன்போது திட்டமிடப்பட்டதாக, இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைத்தலைவர் த.வசந்தராசா கூறினார்.
இதன்போது, இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளிநொச்சிக் கிளை தலைவர் சு.தருமரெத்தினம் உள்ளிட்ட குழுவினரும் மட்டக்களப்பு கிளை தலைவர் த.வசந்தராசா உள்ளிட்ட குழுவினரும் கலந்து கொண்டிருந்தனர்.

2 hours ago
3 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
8 hours ago