2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

டெங்கினால் சிறுமி உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 08 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரசபைப் பிரிவில் டெங்கு காய்ச்சல் காரணமாக  7 வயதுச் சிறுமி ஒருவர்  சனிக்கிழமை (07)  உயிரிழந்ததாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.

காத்தான்குடி ஆறாம் குறிச்சி அப்துல் ஜவாத் ஆலிம் வீதியைச் சேர்ந்த   ஏ.ஸாயிதா ஸித்னா என்ற  சிறுமியே  இவ்வாறு உயிரிழந்தார். இவர் மீரா பாலிகா மகா வித்தியாலயத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்றுவருகின்றார்.

சில தினங்கள் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்த இந்தச் சிறுமி சனிக்கிழமை (06) மிகவும் சோர்வடைந்து காணப்பட்ட நிலையில், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையிலேயே இந்தச் சிறுமி உயிரிழந்தார்.  

இந்தச் சிறுமியின் மரணம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு  மாவட்டத்தில்  கடந்த ஜனவரி மாதத்தில் 260 பேர் டெங்கு தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய தொற்றுநோயியல் வைத்திய அதிகாரி  தர்சினி காந்தரூபன் தெரிவித்தார்.

பெரியவர்களை விட சிறுவர்களையே டெங்கு அதிகம் தாக்குகின்றது. 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களே டெங்கினால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும்  காத்தான்குடி சுகாதார அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (06)  நடைபெற்ற  டெங்கு தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டத்தின்போது  அவர் கூறினார்.


  Comments - 0

  • S.Aravinth Sunday, 08 February 2015 05:41 AM

    Hon .Minister of Health who cancelled the annual transfer-2015 of Public Health Inspector should consider this matter seriously because there are vacant ranges in Kattankudy.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X