Princiya Dixci / 2015 பெப்ரவரி 08 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அதிகாரத்தை அமைப்பதற்கான வாய்ப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு காலம் கடந்து செல்லவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளே இந்த நிலைமைக்கு காரணம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்னம், சனிக்கிழமை (07) தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ள நிலையில் நேற்று தமிழ் மிரர்க்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு இன்னும் த.தே.கூட்டமைப்புக்கு காலம் கடந்து செல்லவில்லை. அதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளது. கிழக்கு மாகாண சபையில் இவ்வாறானதொரு நெருக்கடி நிலையேற்பட்டதற்கு த.தே.கூட்டமைப்பும் ஒரு காரணமாகும்.
எமக்கிருந்த சந்தர்ப்பத்தை நாங்கள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ளவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன ஒற்றுமை, மனித பண்பு, யாரையும் ஏமாற்றாத தன்மை மற்றும் நல்லாட்சி அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்களுடன் பயணித்ததன் காரணமாகவே இந்த நிலைமையேற்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அதிகாரத்தை பெறுவதற்கான பல வழிமுறைகள் காணப்பட்டன. அனைத்து வழிமுறைகளையும் உரிய முறையில் கையாள்வதற்கு த.தே.கூ தவறிவிட்டது.
இது தொடர்பில் மக்கள் மனம் தளர வேண்டியதில்லை. இன்னும் காலம் கடந்து செல்லவில்லை. விரைவில் அதற்கான பதிலை மக்கள் அறிந்துகொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.
45 minute ago
59 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
59 minute ago
4 hours ago
5 hours ago