2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

காவலில் ஈடுபட்ட இளைஞர் மீது தாக்குதல்

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 09 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி, கட்டக்காடு பகுதியில்  இனந்தெரியாதோரின் தாக்குதலுக்கு  உள்ளாகி படுகாயமடைந்த சித்தாண்டியைச் சேர்ந்த எஸ்.முரளிதரன் (வயது 26) என்பவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் திங்கட்கிழமை (9) காலை  தம்மிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

காவல் கடமையின் நிமித்தம் கட்டக்காடு வயல்வெளியில் உள்ள வாடியில்  இருந்தபோது, ஞாயிற்றுக்கிழமை (8) இரவு இவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

சந்தனமடு ஆற்றுப்பகுதியில் மேற்கொள்ளப்படுகின்ற மணல்; அகழ்வுக்கு எதிராக அண்மையில் சித்தாண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களுக்கு இவர் தலைமை தாங்கியதாகவும் இதன் காரணமாக இவர் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம் எனவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த தாக்குதல் சம்பவம்  தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X