2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் அரையாண்டு பரிசீலனை

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 10 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு மாவட்டம், வெல்லாவெளிப் பொலிஸ் பொலிஸ் நிலையத்தில் அரையாண்டு பரிசீலனை செவ்வாய்க்கிழமை (10)  வெல்லாவெளி நிலையப் பொறுப்பதிகாரி எச்.சி.பி.வெலகெதர தலைமையில் நடைபெற்றது.

இந்த பரிசீலனை நடவடிக்கையை அவதானிப்பதற்காக மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உபாலி ஜெயசிங்க இதில் கலந்துகொண்டார்.

இதன்போது பொலிஸ் உத்தியோகத்தர்களின் அணிநடை மரியாதையை மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏற்றுக்கொண்டர். பின்னர் ஒவ்வொரு பொலிஸ் உத்தியோகத்தர்களின் சேவைக்காலம் மற்றும் செயற்பாடுகளையும் அவர் கேட்டறிந்ததுடன்,   பொலிஸ் நிலையத்துக்கு சொந்தமான உடைமைகள் மற்றும் வாகனங்களையும் பார்வையிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X