Sudharshini / 2015 பெப்ரவரி 10 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
சிறு குற்றங்களுக்காக நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்டவர்களை கொண்டு நிறைவேற்றப்படும் சமுதாயஞ்சார் சீர்த்திருத்தப் பணிகள், மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி மத்திய மகா வித்தியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (10) ஆரம்பித்து வைக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் சமுதாயஞ்சார் சீர்த்திருத்த உத்தியோகத்தர் சுப்பிரமணியம் தயானந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி என்.எம். அப்துல்லாஹ்வின் வழிகாட்டுதலின் கீழ், சிறு குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்ட 18 பேர் முதற்கட்டமாக இந்த சமுதாயஞ்சார் சீர்திருத்த சிரமதானப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.
சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சின் சமுதாயஞ்சார் சீர்த்திருத்தத் திணைக்களம், சிறைக் கைதிகளின் நன்னடத்தைப் பண்புகளை விருத்தி செய்து அவர்களை சமூக வாழ்வில் மீண்டும் இணைத்துக் கொள்வதற்காக இத்தகைய வேலைத் திட்டங்களை அமுல்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.
செங்கலடி மத்திய மகாவித்தியாலயத்தின் சுற்றுப்புறச் சூழலை சுத்தம் செய்யும்; பணி இன்று செவ்வாய்க்கிழமை (10)காலை இடம்பெற்றது.
டெங்கு நோயை இல்லாதொழிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், இந்த சிரமதானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
செங்கலடி மத்திய மகா வித்தியாலய பிரதி அதிபர் எஸ். ஸ்ரீதரன், சிறைச்சாலைகள் திணைக்களத்தின் சமுதாயஞ்சார் சீர்த்திருத்த உத்தியோகத்தர் எஸ். தயானந்தன், அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். லிங்கேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
20 minute ago
34 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
34 minute ago
4 hours ago
4 hours ago