Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 11 , மு.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா
புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ், இலங்கை மத்திய வங்கியின் அனுசரணையுடன் கிழக்கு மாகாணத்தில் பசுப்பால் உற்பத்தியை அதிகரிக்கும் வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் புதன்கிழமை (11) ஆரம்பித்துவைக்கப்பட்டது.
மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இலங்கை மத்திய வங்கியின் உதவி பணிப்பாளர் எம்.எம்.தெஸீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.தவராஜா, எச்.டி.எப்.சீ.வங்கியின் சிறுகடன் பிரிவு முகாமையாளர் அனுர திசாநாயக்கா, பிராந்திய முகாமையாளர் ஆh.எம்.சுகதபால உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 100 பயனாளிகள் பசுப்பால் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதற்காக விரைவில் மத்திய வங்கியினால் கடன் வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் மத்திய வங்கியின் உதவி பணிப்பாளர் எம்.எம்.தெஸீம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் காலநிலைக்கு ஏற்ப அதிகளவில் பால் கறக்கக்கூடிய நல்லின பசுக்களை இனங்கண்டு மத்திய வங்கியின் வழிகாட்டலில் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
எச்.டி.எப்.சீ.வங்கி இதனை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
7 hours ago