2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

'பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒளியை தருவதற்கே புதிய ஆட்சி பிறந்துள்ளது'

Gavitha   / 2015 பெப்ரவரி 14 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

இலங்கையில் இருந்த அராஜக ஆட்சி, காட்டாட்சி, எமது இனத்தை அழித்து, ஒழித்த ஆட்சி மாறி ஒரு ஜனநாயக ஆட்சி, அதாவது எமது பாதிக்கபட்ட சமூகத்துக்கு ஒளியைத் தரும் என நினைக்கும் அளவுக்கு தற்போது புதிய ஆட்சி பிறந்திருக்கின்றது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

மட்.மண்டூர் 14 அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி வெள்ளிக்கிழமை (13) மாலை மேற்படி பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
அங்கு கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'கடந்த காலங்களில் தமிழ் மக்கள் பல சொத்துக்களையும் உயிர்களையும் உடமைகளையும் இழந்துள்ளார்கள். ஆனால் இழந்துள்ள உயிர்களை மீண்டும் பெறாவிட்டாலும் கல்வியின் மூலம் ஏனைய அனைத்தினையும் பெற்றுவிடலாம்.

பிரதேச அபிவிருத்தி, சமூதாய முன்னேற்றம், அனைத்தினையும் கல்வியின் மூலம் பெற்றுவிடலாம். இவைகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு மாணவர்கள் பெற்றோர், ஆசிரியர்கள் போன்றோருக்கு கீழ்ப்படிந்து நன்றாகக் கல்வி கற்க வேண்டும்.

பெற்றோர்கள் பிள்ளைகளுடன் அன்னியோனியமாகப் பழகவேண்டும். பாடசாலைகளில் பிள்ளைகள் இருக்கும் காலத்தை விட பெற்றோர்களிடத்தில் பிள்ளைகள் இருக்கும் நேரம் அதிகமாகும். எனவே பெற்றோர்கள், வீட்டில் பொழுதுபோக்கு சாதனங்களைக் குறைப்பதன் மூலம் பிள்ளைகளின் கற்றலை மேலும் மேம்படுத்த முடியும்.

அதுபோல் மாணவர்களும் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சமுதாயத்துக்கும் கட்டுப்பாட்டு தீய பழக்க வழக்கங்களுக்கு பழக்கப்படாமல், எதிர்காலத்தில் சிறந்த கல்விமான்களாகத் திகழும் போது, எமது பிரதேசம் தானாகவே அபிவிருத்தி கண்டுவிடும்.

கடந்த ஆட்சிக்காலத்தில் அதிபர், ஆசிரியர்கள், அரசியல் வாதிகள், உட்பட பலரும் அடக்கப்பட்டார்கள், தடுக்கப்பட்டார்கள் என்பது உண்மை. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினருக்கு பாடசாலை நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு அனுமதி கிடைக்கவில்லை. தற்போது அந்த நிலமை மாறி இருக்கின்றது.

இலங்கை தேசிய அரசிலில் மாற்றம் வந்துள்ளது போல, கிழக்கு மாகாண ஆட்சியிலும் மாற்றம் வந்துள்ளது. கிழக்கு மாகாண ஆட்சி அதிகாரத்தில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பங்குபற்ற வேண்டும் என எதிர்பார்த்திருக்கின்றார்கள். கடந்த காலங்களில் எதிர்கட்சி வரிசையிலிருந்தது போதும். இனிவரும் காலத்தில் ஆட்சி அதிகாரத்திலிருந்து பல

வேலைத்திட்டங்களை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு முன்னெடுக்க வேண்டும் என தமிழ் மக்கள் எதிர்பார்திருக்கின்றார்கள்.  
எனவே, சோரம் போகாமல் அரசியல் செய்யும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு எதிர்காலத்தில் எமது மக்கள் மத்தியில் அபிவிருத்திகளையும் முன்னெடுக்கக் காத்திருக்கின்றது என்று தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X