Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 16 , மு.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எம்.அஹமட் அனாம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து பெப்ரவரி மாதம் 14ஆம் திகதிவரையான காலப்பகுதியில் 34 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.எம்.நஜீப்கான் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வருட இறுதியில் பெய்த அடை மழையை தொடர்ந்தும் தற்போது பெய்கின்ற மழை காரணமாகவும் டெங்கு நுளம்புகளின் தாக்கம் இந்தப் பிரதேசத்தில் அதிகரித்துக் காணப்படுகின்றது.
டெங்கு நுளம்புகளின் பெருக்கத்தை இல்லாமல் செய்யும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் வாரத்தில் மூன்று நாட்கள் வீடுகளுக்குச் சென்று வீடு மற்றும் வீட்டுச்சூழலையும் பார்வையிட்டு, அறிவுரைகளும் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
அத்துடன், சுகாதார வைத்திய அதிகாரியின் வழிகாட்டலில் பிரதேசத்திலுள்ள திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச சபை தவிசாளர், பிரதி தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் அடங்கலாக குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. அக்குழு டெங்கு நுளம்புகளின் பெருக்கத்தை இல்லாமல் செய்யும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.நௌபர்; தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .