Gavitha / 2015 பெப்ரவரி 15 , மு.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

-த.நவோஜ்
வாகரை பால்ச்சேனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு வித்தியாலய மைதானத்தில் வெள்ளிக்கிழமை (13) நடைபெற்றது.
இன்போது, விளையாட்டு வீரர்களால் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு அணிவகுப்பு, விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு மைதான நிகழ்ச்சிகள், பழைய மாணவர் நிகழ்ச்சிகள், ஆசிரியர்கள் நிகழ்ச்சிகள், உடற்பயிற்சி கண்காட்சி, உத்தியோகஸ்தர் நிகழ்ச்சிகள், பெற்றோர் நிகழ்ச்சிகள் மற்றும் விநோத உடை போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றது.
பின்னர், வெற்றி பெற்ற வீரர்களும் வெற்றி பெற்ற இல்லங்களும் அதிதிகளால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அத்தோடு பல்கலைக்கழகம் தெரிவான மூவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் சிறுதொகைப் பண உதவியை அன்பளிப்பாக வழங்கி வைத்தார். மேலும் அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த எஸ்.சுரேஸ் என்பவரும் சிறுதொகையை இவர்களுக்கு வழங்கி வைத்தார்.
வித்தியாலய அதிபர் பொ.இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கலந்து கொண்டதுடன், அதிதிகளாக கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா, வாகரை கல்வி வலய கோட்டக் கல்விப் பணிப்பாளர் ச.பரமேஸ்வரன், உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் க.சுபாஸ்சந்திரன், வாகரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.வி.கே.பாலித்த ஜெயரெட்ண, பிரதேச பாடசாலை அதிபர்கள், கல்குடா கல்வி வலய ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .