2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

வறிய மாணவர்களுக்கு புத்தகப்பை, பாதணிகள் வழங்கிவைப்பு

Gavitha   / 2015 பெப்ரவரி 17 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட பின்தங்கிய பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு மட்டக்களப்பு ரோட்டறிக்கழகத்தின் ஏற்பாட்டில் திங்கட்கிழமை (16) பாதணிகள் மற்றும் புத்தக பைகள் வழங்கப்பட்டன.

புளியடிமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, கொக்குவில் விக்னேஸ்வரா வித்தியாலயம், நாவலடி நாமகள் வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி பயிலும் சுமார் 150 மாணவர்களுக்கு இந்த பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
தமிழ்நாட்டில் உள்ள வேலூர் மற்றும் தனவந்திரி ஆகிய ரோட்டறிக்கழகங்களின் அனுசரனையுடன் இந்த பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வு, புளியடிமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் வி.சேகர் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ரோட்டறிக்கழகத்தின் தமிழ்நாட்டுக்கான ஆளுநர் ஏ.சம்பத்குமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், சிறப்பு அதிதிகளாக வேலூர் மற்றும் தனவந்திரி ஆகிய ரோட்டறிக்கழகங்களின் முன்னாள் தலைவர்களான கே.பாலசுப்ரமணியம், இந்திரா சுப்ரமணியம், ரி.ஆர்.தனசேகர் மற்றும் இலங்கை ரோட்டறிக்கழகத்தின் உதவி ஆளுநர் வினோபா இந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, மாணவர்களுக்கான புத்தக பைகள் மற்றும் பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X