2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

மட்டக்களப்பு, சாரணர் சங்க மஹா சிவராத்திரி பெருவிழா

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 17 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மஹா சிவராத்தி நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

இலங்கை சாரணர் சங்க தேசிய தலைமையகத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கம் நடத்திய சாரணர் விசேட நிகழ்வு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில், செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சாரணர் ஆணையாளர் ஈ.பி.ஆனந்தராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பட்டிருப்பு, மட்;டக்களப்பு, மட்டக்களப்பு மேற்கு ஆகிய கல்வி வலயங்களிலிருந்து மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

இதன்போது ஆலய வளாகத்தில் சிரமதான நிகழ்வுகள் நடத்தப்பட்டதுடன் மாணவர்களுக்கான ஆன்மீக நிகழ்வுகளும் நடத்தப்பட்டன.

அத்துடன், சாரண ஆசிரியர்களுக்கான சின்னங்கள் சூட்டப்பட்டதுடன் அன்னதானமும் வழங்கப்பட்டன.

இளம் சமூகத்தின் மத்தியில் சமூக ஒற்றுமையினை ஏற்படுத்தும் வகையில் வருடாந்தம் இதுபோன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட சாரணர் ஊடக உதவி ஆணையாளர் ஆ.புட்கரன் தெரிவித்தார்.

இந்த மஹா சிவராத்திரி பெருவிழாவின் போது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X