Sudharshini / 2015 பெப்ரவரி 17 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-த.நவோஜ்
மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட செங்கலடி, ஐயங்கேணி தமிழ் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி, திறனாய்வு வித்தியாலய மைதானத்தில் திங்கட்கிழமை (16) மாலை நடைபெற்றது.
வித்தியாலய அதிபர் எஸ்.மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன்;, மட்டக்களப்பு வலயக் கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன், கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.பாலசுப்பிரமணியம், மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் எஸ்.ஜெயராஜ், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பிர்கள், பொது அமைப்புக்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில், வெற்றி பெற்ற வீரர்கள் அதிதிகளால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .