Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 18 , மு.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
நாகரிக மோகத்தில் திளைத்துள்ள இன்றைய இளைஞர் சமுதாயம் இஸ்லாமிய கலாசாரத்தின் அடிப்படைகளை பின்பற்றுவது இன்றைய காலத்தின் தேவையாகும் என்று காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தெரிவித்தார்.
காத்தான்குடி பிரதேச கலாசார மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் விழாவில், பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'இன்று நாகரிகம் என்ற போர்வையில் பல்வேறு அநாகரிகமான மேற்குலக கலாசாரத்தை பிரதிபலிக்கக்கூடிய சம்பவங்கள் இடம்பெறுகின்றன. இதனால், எமது இளைஞர், யுவதிகள் சீரழிவதையும் சமூகத்தில் காணக்கூடியதாகவுள்ளது. ஆனால், இஸ்லாமிய ஒழுக்கவிழுமியங்களையும் பண்பாடுகளையும் போதிக்கின்ற இந்த நடைமுறை எக்காலத்துக்கும் பொருந்தக்கூடியதாகும்.
இந்த வகையில், கலாசார நிலையங்களின் ஊடாக இவை போதிக்கப்படுகின்ற அதேவேளை, கண்காணிக்கப்படவும் வேண்டும். எமது இளைஞர் சமூகம் சரியான பாதையில் செல்ல அனைவரும் ஒத்துழைக்கவேண்டும்' என்றார்.
அத்துடன், காத்தான்குடியைச் சேர்ந்த கலைப்படைப்பாளிகளையும் இதன்போது அவர் பாராட்டினார்.
இதன்போது, 30 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மேற்படி நிகழ்வுக்கு கௌரவ அதிதியாக காத்தான்குடி உதவிப்பிரதேச செயலாளர் ஏ.சி.அப்கர், கலாசார உத்தியோகத்தர் எம்.முனீர் நளீமி உட்பட கலைஞர்களும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .