Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 18 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
கிழக்கு பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளை சிலர் சீர்குலைக்க முற்படுவதாக தெரிவித்து அப்பல்கலைக்கழகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் புதன்கிழமை (18) நடைபெற்றது.
வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால்; நடத்தப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில், பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் ஊழியர் சங்கத்தை சேர்ந்த அனைத்து ஊழியர்களும் பங்குகொண்டனர்.
அண்மைக்காலமாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளை சிலர் தனிப்பட்ட சுய இலாபங்களுக்காக தவறான முறையில் பிரசாரம் செய்துவருவதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.
'தனிப்பட்ட ஒருசிலரின் சுய இலாபத்துக்காக பல்கலைக்கழகத்தின் எதிர்காலத்தை பாழடிக்காதே', 'வீண் விவாதம் தவிர்', 'பல்கலைக்கழக அபிவிருத்தியில் இணை, உலகதரம் நோக்கிய கல்வி பயணத்துக்கு தடையாக இருக்காதே' போன்ற வாசகங்களை கொண்ட சுலோ அட்டைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.
இதன்போது, பல்கலைக்கழக தொழிற்சங்கத்தினால் துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .