Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 19 , மு.ப. 08:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரசபைப் பிரிவில் டெங்கு அவசர நிலைமை காரணமாக மூடப்பட்ட சகல முன்பள்ளிகள், குர்ஆன் மதரசாக்கள், பிரத்தியேக கல்வி நிலையங்கள் மீளவும் திறக்கப்படவுள்ளதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.
கடந்த 2ஆம் திகதி காத்தான்குடி நகரசபைப் பிரிவில் டெங்கு அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்தப் பிரிவிலுள்ள சகல முன்பள்ளிகள், குர்ஆன் மதரசாக்கள், பிரத்தியேக கல்வி நிலையங்கள் ஆகியவற்றில் டெங்கு சோதனை மற்றும் துப்பரவு நடவடிக்கை முடிவடையும்வரை இவை மூடப்பட்டன
இந்த நிலையில், இது தொடர்பான கூட்டம் காத்தான்குடி சுகாதார அலுவலகத்தில் வியாழக்கிழமை (19) நடைபெற்றது.
இதன்போது குர்ஆன் மதரசாக்கள் மற்றும் பிரத்தியேக கல்வி நிலையங்கள் எதிர்வரும் சனிக்கிழமையும் (21) சகல முன்பள்ளிகளும்; திங்கட்கிழமையும் (23) திறக்கப்படவுள்ளன.
இவை திறக்கப்படுவதற்கு முன்னராக மேற்படி முன்பள்ளிகள், குர்ஆன் மதரசாக்கள், பிரத்தியேக கல்வி நிலையங்கள் ஆகியவற்றை சூழவுள்ள 25 வீடுகளின் நிலைமை தொடர்பில் ஆராய்ந்து அவர்களின் பெயர், முகவரி மற்றும் அந்த வீடுகளின் துப்பரவு நிலைமை, டெங்கு நுளம்புகள் இல்லாத இடங்கள் என்பதையும் உறுதிப்படுத்திய ஆவணங்களை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சமர்ப்பிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக யு.எல்.நசிர்தீன் மேலும் தெரிவித்தார்.
காத்தான்குடி நகரசபைப் பிரிவில் கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து 18.2.2015வரை 76 பேருக்கு டெங்கு நோய் இனங்காணப்பட்டதுடன், டெங்கு நோயினால் இருவர் மரணமடைந்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .