2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

சமுர்த்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளை தீர்க்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 20 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளை தீர்த்துவைக்க நடமாடும் சேவையை நடத்துவதற்கு  நடவடிக்கை எடுப்பதாக வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார்.

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளை உத்தியோகத்தர்கள் இன்று வெள்ளிக்கிழமை (20) பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியை சந்தித்தபோது கருத்துத் தெரிவிக்கையிலேயே  அவர் மேற்கண்டவாறு  மேற்கண்டவாறு கூறினார்.

வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளை உத்தியோகத்தர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூரிலுள்ள சமுர்த்தி மகா சங்க கட்டிடத்தில்  சந்தித்தனர்.

இதன்போது சமுர்த்தி உத்தியோகத்தர்களின் தரமுயர்வு மற்றும் பதில் கடமைக்கான சம்பளம், உத்தியோகத்தர்களின் நியமனத்திகதி மாற்றம், மோட்டார் சைக்கிள் விடயம், இடமாற்றம் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து பிரதியமைச்சரிடம் விடயங்களை முன்வைத்தனர்.

இவைகளை கேட்டறிந்த பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, இவ்விடயங்கள் தொடர்பில் சமுர்த்தி உயரதிகாரிகளை மட்டக்களப்புக்கு அழைத்துவந்து மட்டக்களப்பு மற்றும் கல்குடா, பட்டிருப்பு ஆகிய மூன்று தொகுதிகளிலும் வௌ;வேறு தினங்களில் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கென நடமாடும் சேவையை நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதுடன், அவ்வாறானா நடமாடும் சேவை நடத்தப்படும் பட்சத்தில் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும் என பிரதியமைச்சர் அமீர் அலி தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளை உத்தியோகத்தர்களின் சார்பில் அதன் தலைவர் எஸ்.ரவி, செயலாளர் எம்.எச்.எம்.அன்வர் உட்பட நிர்வாக அங்கத்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X