2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி வழங்கு நிகழ்வு

Gavitha   / 2015 பெப்ரவரி 21 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வட்டவான், மாங்கேணி போன்ற கிராமங்களில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 600 குடும்பங்களுககு 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான உலர் உணவு, அத்தியாவசிப் பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (20) நடைபெற்றது.

இங்கிலாந்து கபோட் நிறுவனத்தின் நிதியுதவியுடன் இலங்கை கரித்தாஸ் செடெக் நிறுவக அனுசரணையுடனும் மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவகத்தினால் இந்த பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

ஒரு குடும்பத்துக்கு ரூபாய் 10,000 பெறுமதியான உணவு, உணவல்லாத பொருட்களான அரிசி 16கிலோகிராம், கொத்மலை பசும்பால் 14 பக்கட்,  நெத்தலி, பருப்பு, சீனி, தேயிலை, கறித்தூள், மிளகாய்த்தூள், பாய், வெற்சீற், சாரன், சாறி, துவாய், சவர்க்காரம், பற்பசை போன்ற பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இப்பொதிகளை இலங்கை கரித்தாஸ் செடெக் நிறுவக இயக்குனர் அருட்தந்தை ஜோர்ச் சிகாமணி, திட்டமிடல் உத்தியோகஸ்தர் கே.தெய்வேந்திரராஜா, சிரேஷ்ட நிதி முகாமையாளர் றயல் பெரேரா, அருட்சகோதரி எஸ்.ஜே.தயாளினி, திருமதி.ரி.விபுலா ஆகியோரும் வழங்கி வைத்தனர்.

அத்துடன், மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவக இயக்குனர் அருட்தந்தை ஜிரோன் டி லிமா, நிதி முகாமையாளர் புண்ணியமூர்த்தி மற்றும் ஏனைய உத்தியோகஸ்தர்களும் இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X