2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

மட்டக்களப்பில் மதுச்சாலை உடைத்து குடிவகைகள் திருட்டு

Gavitha   / 2015 பெப்ரவரி 21 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்,வடிவேல் சக்திவேல்   

மட்டக்களப்பு நகர பொலிஸ் பிரிவிலுள்ள புதுநகரில், தனியாருக்குச் சொந்தமான மதுபானசாலைகளில் உள்ள மதுபொருட்கள் வெள்ளிக்கிழமை (20) கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

புதுநகர் வவுணதீவு – மட்டக்களப்பு வீதியில் அமைந்துள்ள மதுபான சாலையிலேயே கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

தனது மதுச்சாலையில் விற்பனைக்கென களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த சுமார் 67 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பியர் குடிபானம் திருடப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் எஸ். வடிவேல் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக Scene Of the Crime Officers பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

புதுநகர் கிராமத்தில் அண்மைக் காலமாக கோயில் உண்டியல்கள், ஒயில் நிலையம், அரிசிக்கடை போன்றன இனந்தெரியாதவர்களினால் கொள்ளையிடப்பட்டு வந்துள்ளதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் வியாபாரிகள் தங்களது கடைகளை இரவு வேளைகளில் மூடி விட்டு வீடுகளுக்கு செல்வதற்கும் அச்சமடைவதாக அவர்கள் கூறுகின்றனர்.

இவ்விடயங்கள் தொடர்பாக பொலிஸாருக்கு பலமுறைப்பாடுகள் செய்தும் எதுவித பயனும் கிடைக்கவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை புதுநகர் பகுதியில் மதுபானசாலைகளை நடத்துவதற்கு அதிகாரிகள் அனுமதியளிக்கக் கூடாது என பொதுமக்களும் மகளிர் அமைப்புக்களும் முன்னர் பல எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X