2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

இளைஞர் கழக சம்மேளன புனரமைப்புக் கூட்டம்

Gavitha   / 2015 பெப்ரவரி 21 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்    

மட்டக்களப்பு கிரான் பிரதேச இளைஞர் கழக சம்மேளன புனரமைப்புக் கூட்டம் கிரான் மகாவித்தியாலயத்தில் வெள்ளிக்கிழமை (20) கோ.தினேந்திரனின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் எம்.எல்.என்.எம்.நைறூஸ், மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஜே.கலாராணி மற்றும் கிரான் பிரதேச இளைஞர் சேவை உத்தியோகஸ்தர் த.விந்தியன் உட்பட கிராமன் பிரதேச இளைஞர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது, கிரான் பிரதேசத்தில் அமைந்துள்ள 24 இளைஞர் கழகங்களை ஒன்றிணைத்து, கிரான் பிரதேசத்துக்குரிய புதிய இளைஞர் கழக சம்மேளத்துக்குரிய நிருவாகம் தெரிவுசெய்யப்பட்டது.

இதன்போது. தலைவராக சு.சுதாகரன், செயலாளராக த.விந்தியன்,  பொருளாளராக சி.ஜீவரஞ்சினி, அமைப்பாளராக கோ.தினேந்திரன், உபதலைவராக த.கிசோத் உபசெயலாளராக தி.தனுக்சன், உப அமைப்பாளராக இ.சசிகரன், ஆகியோர் சிரேஷ்ட பதவிகளுக்காக தெரிவு செய்யப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X