Sudharshini / 2015 பெப்ரவரி 21 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் உயர்தரத்தில் கல்வி பயிலும் இந்து மாணவர்கள் மற்றும் இந்து இளைஞர்கள், அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான இருநாள் தலைமைத்துவ பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பில் இன்று சனிக்கிழமை (21) ஆரம்பமானது.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாமாங்கம் விக்னேஸ்வரா திருத்தொண்டர் சபை மண்டபத்தில் இந்த செயலமர்வு நடைபெற்றுவருகின்றது.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெரும் இச்செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 250க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டனர்.
ஆன்மீக ரீதியில் சிறந்த சமூக கட்டமைப்பினை உருவாக்கும் நோக்கில், இந்த பயிற்சி செயலமர்வு மேற்கொள்ளப்பட்டுவருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
இச்செயலமர்வு பல்வேறு தலைப்பின் கீழ் வழங்கப்பட்டுவருவதுடன் ஆன்மீக தலைவர்களினாலும் பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .