2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மிதிவெடி மீட்பு

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 22 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு விளையாட்டு மைதானத்துக்கு அருகிலுள்ள பற்றைக்காட்டுக்குள் இருந்து மிதிவெடியொன்று மீட்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த மைதானத்தில் சனிக்கிழமை (21)  விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள்,  இதைக் கண்டு தகவல் வழங்கியதாகவும் இதனைத் தொடர்ந்து இந்த மிதிவெடி மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த மிதிவெடி குறித்த இடத்தில் கொண்டுவரப்பட்டு போடப்பட்டிருக்கலாமென்று தெரிவித்த களுவாஞ்சிக்குடி பொலிஸார், இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X