Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 22 , மு.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பிரதேசத்தில் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் முன்னெடுக்கப்பட்ட நீர்விநியோகத்திட்டம் முடக்கப்பட்டமை பற்றி கிழக்கு மாகாணசபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர் நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் றவூப் ஹக்கீமுக்கு கிழக்கு மாகாணசபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர் இன்று ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'ஏறாவூர் பிரதேசத்தில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் இந்த ஆண்டு விஷேட திட்டத்தின் அடிப்படையில் 40 கிலோமீற்றருக்கான நீர் விநியோகத்திட்டம் அனுமதிக்கப்பட்டு அதற்கான பணிகள் இடம்பெற்று வந்த நிலையில் திடீரென அவ்வேலைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன.
நீர்க்குழாய் பதிப்புக்கான பொருட்களும் திட்டப் பிரதேசத்திலிருந்து அகற்றப்பட்டு அவை வேறொரு பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக எனக்கு அறியக் கிடைத்துள்ளது.
சுமார் 50 ஆயிரம் பேர் வசிக்கின்ற ஏறாவூர்ப் பிரதேசத்தில் நிலத்தடி நீரைப் பருகுதல் உடல் நலத்திற்கு கேடாகலாம் என சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ள நிலையில் குழாய் நீர் விநியோக வேலைத்திட்டமும் முடக்கப்பட்டுள்ளமை பற்றி மக்கள் எனது கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளார்கள்.
எனவே, இது குறித்து ஆராய்ந்து விரைவாக நடவடிக்கை எடுத்து இப்பிரதேச மக்கள் சுத்தமான குடிநீரைப் பருகுவதற்கு தோதான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .