Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 22 , மு.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
கிழக்கு மாகாணத்தில் தேசிய பாடசாலைகளைச் சேர்ந்த அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் முறைப்படி மேற்கொள்ளப்படுவதில்லை என்று கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கம் குற்றச்சாட்டியுள்ளது.
இது தொடர்பில் கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.ஜெயராஜா ஞாயிற்றுக்கிழமை (22) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'கிழக்கு மாகாணத்தில் தேசிய பாடசாலைகளைச் சேர்ந்த அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் முறைப்படி மேற்கொள்ளப்படுவதில்லை. ஆனால், தேசிய பாடசாலைகளின் அதிபர்களின் விருப்பு, வெறுப்புக்கு ஏற்ப அவர்களினால் இரகசியமாக வழங்கப்படுகின்ற பெயர்ப்பட்டியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, கல்வி அமைச்சு இடமாற்றங்களை வழங்கிவருவது வேதனைக்குரிய விடயமாகும்.
எனவே, தேசிய பாடசாலைகளுக்கான இடமாற்றங்களை மேற்கொள்கின்றபொழுது மாகாண பாடசாலைகளில் பின்பற்றப்படுகின்ற நடைமுறையை தேசிய பாடசாலை இடமாற்றங்களிலும் பின்பற்றுவது ஆரோக்கியமான செயலாகும். இதற்கு கல்வி அமைச்சு ஆவண செய்யவேண்டும். இவ்வாறாக மேற்கொள்ளப்படுகின்ற முறைப்படியான, வெளிப்படையான கல்வி நிர்வாக நடைமுறைகள் தேவையற்ற முரண்பாடுகளை தீர்க்க உதவும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
49 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
2 hours ago