2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

அம்பாறை மாவட்டத்துக்கான இணைப்புச் செயலாளர் நியமனம்

Kogilavani   / 2015 பெப்ரவரி 22 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.ஏ.ஸிறாஜ்

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் அம்பாறை மாவட்டத்துக்கான இணைப்புச் செயலாளராக, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எஸ்.எல்.எம்.பளீல் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி பதவிக்கான நியமனக் கடிதத்ததை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீரிடமிருந்து எஸ்.எல்.எம்.பளீல் அண்மையில், முதலமைச்சர் காரியாலயத்தில் வைத்துப் பெற்றுக்கொண்டார்.

நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீமுடைய சிபாரிசுக்கமைவாக, இந்த நியமனத்தை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் வழங்கியுள்ளார்.

கிழக்கு மாகாண முதலமைச்சரின் அம்பாறை மாவட்டத்துக்கான இணைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.எல்.எம்.பளீல் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தின் முதலாவது பல்கலைக்கழகப் பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.  

முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரான மேற்படி இவர், அரச மற்றும் தனியார் துறைகளிலும் முக்கிய பதவிகளை வகித்திருந்தார்.

அந்தவகையில், மனித உரிமைகளுக்கான பணிப்பாளராகவும், ஜாமிஆ நழீமிய்யா கல்வி பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் பளீல் பணியாற்றினார்.

இதேவேளை, வங்கி முகாமையாளராகவும் தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவிப் பதிவாளராகவும், 'சிரான்' சமாதானச் செயலகப் பணிப்பாளராகவும் கடந்த காலங்களில் இவர் சேவையாற்றியிருந்தார்.                                                            


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X