2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

பசும்பால் விநியோகிக்கப்படவில்லை என்று முறைப்பாடு

Gavitha   / 2015 பெப்ரவரி 22 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

சத்துணவு வழங்கும் திட்டத்தின் கீழ் பசும்பால் வழங்குவதற்காக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தினால் தெரிவு செய்யப்பட்ட காத்தான்குடி ஹிழுரிய்யா வித்தியாலய மாணவர்களுக்கு இதுவரை பசும்பால் விநியோகிக்கப்படவில்லை என்று பெற்றோர்கள்; தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக ஹிழுரிய்யா வித்தியாலய அதிபர் எம்.எம்.அகமதிடம் வினவியபோது,

பசும்பால் விநியோகிப்பதற்காக காத்தான்குடியில் மெத்தைப்பள்ளி வித்தியாலயம், காங்கேயனோடை அல் அக்ஷா வித்தியாலயம், ஹிழுரிய்யா வித்தியாலயம் ஆகிய மூன்று பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு பசும்பாலை பாதுகாப்பதற்காக குளிரூட்டி மற்றும் பாத்திரம் என்பன வழங்கப்பட்டுள்ளன.

தெரிவு செய்யப்பட்ட மூன்று பாடசாலைகளில் மெத்தைப்பள்ளி வித்தியாலயம், காங்கேயனோடை அல் அக்ஷா வித்தியாலய மாணவர்களுக்கு பசும் பால் வழங்கப்பட்டு வருகிறது.

எனினும் எமது பாடசாலைக்கு இத்திட்டத்தின் கீழ் மூன்று தினங்கள் சத்துணவு வழங்கப்பட்டது. பின்னர் எதுவும் வழங்கப்படவில்லை. எமது ஹிழுரிய்யா வித்தியாலய மாணவர்களுக்கு இது வரை பசும்பால் வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பில் காத்தான்குடி கோட்டக்கல்விப் பணிப்பாளருக்கு அறிவித்துள்ளதாகவும் அதிபர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X