Sudharshini / 2015 பெப்ரவரி 24 , மு.ப. 07:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று தாழங்குடா ஸ்ரீ விநாயகர் வித்தியாலத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாடிக்கட்டட தொகுதி திங்கட்கிழமை (23) திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண கல்வியமைச்சின் 6.5மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டின் கீழ், இம்மாடிக்கட்டடம் கட்டப்பட்டதென வித்தியாலத்தின் அதிபர் எஸ்.மதிசுதன் தெரிவித்தார்.
வித்தியாலத்தின் அதிபர் எஸ்.மதிசுதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பி.அரியநேந்திரன், சி.யோகேஸ்வரன் மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், மண்முனைப் பற்று கோட்டக்கல்விப் பணிப்பாளர், அதிகாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள், வித்தியாலய அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .