Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 24 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பில் நெல் சந்தைப்படுத்தல் சபையானது பெரும்போக அறுவடையில் ஈடுபட்டுவரும் விவசாயிகளிடமிருந்து இம்மாதம் 26ஆம் திகதி முதல் நெல் கொள்வனவு செய்யவுள்ளதாக பிராந்திய முகாமையாளர் டபிள்யூ.எம்.என்.ஆர்.வீரசேகர தெரிவித்தார்.
இந்த நெல் கொள்வனவு கரடியனாறு, வவுணதீவு, தும்பங்கேணி, புலிபாய்ந்தகல், கொக்கட்டிச்சோலை, வாழைச்சேனை ஆகிய இடங்களிலுள்ள நெல் களஞ்சியசாலைகளில் நடைபெறும்.
உரிய தரநிர்ணய அடிப்படையில் வழங்கப்படும் சம்பா, கீரி சம்பா ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் நாடு அரிசி 45 ரூபாய்க்கும் கொள்வனவு செய்யப்படவுள்ளன. ஒரு விவசாயக்காணி உத்தரவுப்பத்திரத்துக்கு 2,000 கிலோ என்ற அடிப்படையில் இக்கொள்வனவு செய்யப்படவுள்ளது.
49 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
2 hours ago