Gavitha / 2015 பெப்ரவரி 25 , மு.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி அப்ரார் பகுதியில் இயங்கிவரும் உமர் சனசமூக நிலையத்தின் பாலர் பாடசாலையின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மேற்கொண்டுள்ளது.
இப்பிரதேச வறிய மாணவர்களின் நலன்கருதி உமர் சனசமூக நிலையத்தினால் நடத்தப்பட்டுவரும் இப்பாலர் பாடசாலை, கடந்த சில வருடங்களாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினால் அமைக்கப்பட்ட கல்வி மையத்தில் இயங்கி வருகின்றது.
மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவுமின்றி மிகவும் கஷ்டமான நிலையில் இயங்கிவரும் இந்தப் பாலர்
பாடசாலைக்கான வசதிகளைச் செய்து தரவேண்டும் என்ற கோரிக்கையினை, உமர் சனசமூக நிலையத்தின் நிருவாகிகள், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியிடம் முன்வைத்திருந்தனர்.
இதன் அடிப்படையில், இப்பாலர் பாடசாலையின் நிலையினை நேரில் கண்டறியுமுகமாக, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதிநிதிகள் செவ்வாய்க்கிழமை (24) அங்கு விஜயம் செய்தனர்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான், அதன் தேசிய அமைப்பாளர் எம்.பி.எம்..பிர்தௌஸ் நளீமி, காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எம்.ஏ.எச்.எம்.மிஹ்ழார், நல்லாட்சிக்கான சூறா சபை உறுப்பினர் யு.எல்.எம்.ரபீக் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட இவ்விஜயத்தின் போது, இப்பாலர் பாடசாலைக்கான மின் இணைப்பு மின் விசிறிகள், பாலர்களுக்கு விளையாட்டு, கற்றல் உபகரணங்கள் ஆகியவற்றை உடனடியாக பெற்றுத் தருவதாக உறுதியளிக்கப்பட்டது.
அத்தோடு எதிர்வரும் காலங்களில் இப்பாடசாலைக்கு மலசல கூட வசதி உள்ளிட்ட ஏனைய வசதிகளையும் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது.
கல்வி உள்ளிட்ட பல விடயங்களிலும் மிகவும் பின்தங்கிய பிரதேசமான அப்ரார் பிரதேசத்தினை மையப்படுத்தி, நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் மேற்கொண்டிருந்த பல்வேறு வேலைத்திட்டங்களின் ஒரு பகுதியாக, இந்த கல்வி மையம் பல வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டது. இப்பிரதேச மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக சில நடவடிக்கைகளையும் இக்கல்வி மையத்தினைத் தளமாகக் கொண்டு மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .