2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

சுகாதார இராஜாங்க அமைச்சரின் மட்டக்களப்புக்கான விஜயம் ஒத்திவைப்பு

Gavitha   / 2015 பெப்ரவரி 25 , மு.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அரசாங்க வைத்தியசாலைகளுக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹசன் அலி, புதன்கிழமை (25) செல்லவிருந்த விஜயம் பிற்போடப்பட்டுள்ளதாக, அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் தெரிவித்தார்.

சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹசன் அலி அவசர தேவையொன்றுக்காக முல்லத்தீவுக்கு சென்றுள்ளதால், அமைச்சரின் மட்டக்களப்பு விஜயம் பிற்போடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காத்தான்குடி மற்றும் களுவாஞ்சிகுடி, வாழைச்சேனை ஆகிய ஆதார வைத்தியசாலைகளுக்கும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கும் ஏறாவூர் மாவட்ட வைத்தியசாலைக்கும் புதன்கிழமை (25) சுகாதார இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி விஜயம் செய்ய இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X