2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

சிறு தொழில் முயற்சியாளர் தொடர்பான 2ஆம் கட்ட கலந்துரையாடல்

Gavitha   / 2015 பெப்ரவரி 28 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு வாகரையில் சிறு தொழில் முயற்சியாளர் தொடர்பான  2ஆம் கட்ட கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (27) வாகரைப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் எஸ். ஆர் ராகுலநாயகி தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கடன் வழங்கும் நிறுவனங்கள், கடன் வழங்கிய நபர்கள், கடன்; பெற்றவர்களின் வாழ்வியலில் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.

மேலும் எதிர்காலத்தில் புதிய பயனாளிகளுக்கு கடன் வழங்குவதில்லை என்றும் மாவட்ட செயலகத்தினால் அனுமதியளிக்கப்பட்ட  வட்டி வீதத்துக்கு கூடுதலாக கடன் வழங்;கும் நிறுவனங்கள் பிரதேச செயலக பிரிவுக்;குள் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் முடிவெடுக்கப்பட்டன.

இதேவேளை சிறு தொழில் முயற்சியாளர்களுக்கான மாநாடு மார்ச் மாதம் வாகரையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது, சிறு தொழில் முயற்சியாளர் உற்பத்தி பொருள் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெறும்.

இந்தக் கலந்துரையாடலில் நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X